Pages

Friday, 11 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 153

Usually I am afraid of owl’s (image) sound and jumping of male monkey to another jack tree branch. Such a tendency makes me shake her heart that he (her lover) passing through the long in the mountain slope to meet her. – She the lover says.  

This is a poem compiled by KABILAR
2nd century B.C.

153. குறிஞ்சி

குன்றக் கூகை (படம்) குழறினும், முன்றிற்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சும்மன்; அளித்து என் நெஞ்சம்! இனியே,
ஆர் இருட் கங்குல் அவர்வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே.

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி,
''நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?''
என்ற தோழிக்கு,
''அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்''
எனத் தலைமகள் கூறியது.
கபிலர் பாடல்

கோட்டான் கத்தினாலும், பலாக் கிளையில் ஆண்குரங்கு பாய்ந்தாலும் நான் பயப்படுவேன். மலைச்சாரல் நீண்ட வழியில் அவர் வந்தால் என்னால் தாங்க முடியுமா?




No comments:

Post a Comment