Pages

Tuesday, 8 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 134

I think it is better that he should not leave us alone in future. The lover says to her friend-maid. He is the Man of a hill where the water falls seems as snake crawling into the soil. The falls downs with anger because of a rock-block and scattered the flowers tree VENGAI.

This is a poem compiled by KOVENGAI PERUNKATHAVN, the name derived from his usage in one of his poems
2nd century B.C.

134. குறிஞ்சி

அம்ம வாழி தோழி! நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி,
நிலம் கொள் பாம்பின், இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.

வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது
கோவேங்கைப் பெருங்கதவன் பாடல்

பாறாங்கல் தடுத்ததால் 
வேங்கைமரப் பூக்கள் சிதறும்படி 
சினங்கொண்டு வீழும் அருவி 
நிலத்தில் பதுங்கும் பாம்பு போல் தோன்றும் மலைக்கு 
அவன் தலைவன்.

தோழி! 
நீ வாழ்க! 
இதனைக் கேள்! 
மலைநாடனொடு கலந்த நட்பு 
பிரிவு என்பதே இல்லாமல் இருந்தால் நல்லது. 


2 comments: