Pages

Tuesday, 1 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 95

Being water-like she burned my valor

He says to his friend about his lover. Her complexion is chill like water. But it burned my courage as fire. She is a daughter of an ordinary hill man KURAVAN who lives in a small village at the side of flower park where a falls (image) shining.  

This is a poem compiled by KABILAR

95. குறிஞ்சி

தண்ணீர் எரிக்கிறதே

மால் வரை இழிதரும் தூ வெள் அருவி 

கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்

சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்

நீர் ஓரன்ன சாயல்

தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.


தலைமகன் பாங்கற்கு உரைத்தது

கபிலர் பாடல்

அவள் குறவன் மகள். சிறிய குடும்பத்தில் பிறந்தவள். பருத்த தோளுடன் கூடிய மார்பகத்தை உடையவள். அவள் மேனி தண்ணீர் போல் குளுமையானது. ஆனால் அது தீயைப் போல என் வலிமையையெல்லாம் அழித்துவிட்டது.

மலையிலிருந்து இறங்கும் தூய வெண்ணிற நீர்வீழ்ச்சி கற்குகையில் ததும்பும் மலைச்சாரலில் பூத்துக் குலுங்கும் மலர்களுக்கு இடையே அவள் ஊர் உள்ளது. (உதவமுடியுமா?)

No comments:

Post a Comment