Pages

Thursday, 29 May 2025

தண்டியலங்காரம் - அற்புத உருவகம்

மிகச் சிறப்பாகச் சொல்லப்படும் உருவகத்ததை அற்புத உருவகம் என்பர். 

பாடல் - எடுத்துக்காட்டு
 
மன்றல் குழலார் உயிர் மேல் மதன் கடவும் 
தென்றல் கரி தடுக்கும் திண் கணையம் - மன்றலரைக்
கங்குல் கடலில் கரை ஏற்றும் நீள் புணையாம் 
பொங்கும் நீர்நாடன் புயம்

பாடல் - செய்தி

மணக்கும் குழலினை உடைய மடவார் மேல் மன்மதன் தென்றல் என்னும் யானையை ஏவுவான். அந்த யானையைத் தடுக்கும் கணைய மரம் நீர்நாடன் (சோழன்) புயம். மேலும் அந்தப் பெண்கள் இரவு என்னும் கடலைக் கடக்க அவர்களுக்கு உதவும் மிதவைப் புணையாகவும் அவன் தோள் இருக்கும். 

குறிப்பு

தென்றல் யானையை மன்மதன் மகளிர் மேல் ஏவுவான். அந்த யானையைத் தடுக்கும் கணையமரம் சோழன் தோள். அந்தத் தோள் இரவுக் கடலைக் கடக்க ஏறிச் செல்லும் படகாகவும் மகளிர்க்கு உதவும். இப்படி உருவகமானது இந்தப் பாடலில் அற்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது.  

தண்டியலங்காரம் PDF பக்கம் 101 | நூல் பக்கம் 76
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment