சிறந்த பொருள்களாக உருவகம் செய்வது சிறப்புருவகம்.
பாடல் - எடுத்துக்காட்டு
மழலை வாய் நவ்வி மதர் நெடுங்கண் மஞ்ஞைகுழலின் பொறை மெலிந்த கொம்பர் - சுழல் கலவம்தாங்கிய அன்னம் தடம் கொங்கை ஆர் அமுதம்தேம் கொள் கமலத் திரு
பாடல் - செய்தி
என்னவள் ஒரு திருமகள்.ஒரு மான்.ஒரு மயில்.ஒரு கொம்பு.ஓர் அன்னம்.ஓர் அமுதம்.தேன் இருக்கும் கமல மலரில் வீற்றிருக்கும் திரு.அவள் மழலை மொழி பேசும் புதுமையான மான்.இயல்பாக மதர் நெடுங்கண் கொண்ட நவ்வி மான்.அவள் ஒரு மயில்.கூந்தல் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கும் மரக் கொம்பு.
அந்த மரக் கொம்பில் இருக்கும் மயில்.அவள் கூந்தல் சுழலும் மயிலின் தோகை.குளத்தில் இருக்கும் அன்னம்.அவள் கொங்கை என்னும் அமுதம் கொண்டவள்
குறிப்பு
திருமகள், மான், மயில், அன்னம், அமுதம் என்று சிறந்த பொருள்களாக அவள் உருவகம் செய்யப்பட்டிருப்பதால் சிறப்புருவகம்.
முன்பே ஒரு வகை சிறப்பு உருவகம் கூறப்பட்டுள்ளது. அதில் பிரமன், திருமால், வான்கங்கை ஆகிய சிறந்த பொருள்களாகச் செய்யப்பட உருவகத்தைக் காணலாம்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 100 | நூல் பக்கம் 75
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment