உவமையை விகாரப்படுத்தி,
(மாற்றம் செய்து)
பொருளோடு புணர்த்துவது
விகார உவமை
சீத மதியின் ஒளியும் செழும் கமலக்
போதின் புது மலர்ச்சியும் கொண்டு - வேதா தன்
கைம்மலரால் அன்றிக் கருத்தால் வகுத்து அமைத்தான்
மொய்ம்மலர்ப் பூங்கோதை முகம்
- குளிர்ந்த மதியத்தின் ஒளி
- தாமரையின் மலர்ச்சி
- இருக்கும்படி
- பிரமன்
- தன் கைகளாலும்
- கருத்தாலும்
- மலர் சூடும் பைங்கோதை முகத்தை அமைத்திருக்கிறான்.
கையாலும் கருத்தாலும் பிரமன் படைத்தான் என்று
விகாரப்படுத்தப் பட்டுள்ளது
முத்துக் கூர்த்து அன்ன முளை இளம் கூர் எயிற்று
மணி தொடுத்து அன்ன ஐம்பால் மறுத் துடைத்து
மதியம் வைத்து அன்ன வாள் முகத்து ஒருத்தி
- உருண்டிருக்கும் முத்து கூர்மை ஆனது போலக் கோத்த பற்கள்
- மறு துடைத்த ஐம்பால் (கூந்தல்)
- ஆகியவை
- மதியம் போன்ற முகத்தில் இவள் பெற்றிருக்கிறாள்.
உருண்டிருக்கும் முத்து
கூர்மை ஆனது போல
என்று
முத்து விகாரப்படுத்தப் பட்டுள்ளது
தண்டியலங்காரம் PDF பக்கம் 73
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
![]() |
| முத்து |

No comments:
Post a Comment