முருகன் கோயில் இருக்கும் மலைகளில் ஒன்று சென்னிமலை.
மேழிச் செல்வம் என்னும் நூலின் முப்புப் பகுதியில் (பக்கம் 20, 21) இம்மலை பற்றிய செய்திகள் சில உள்ளன.
இது கொங்கு பூந்துறை நாட்டில் உள்ளது. மேரு மலையின் கொடுமுடிகளில் ஒன்றே சென்னிமலை. உத்தண்ட வேகன் முத்துக்குமரன் என்பது இங்குள்ள முருகன் பெயர்.
புட்ப-கிரி, சிரகிரி, சிகரகிரி என்பன இந்த மலையின் வேறு பெயர்கள்.
பட்சி தீர்த்தம், மாமாங்க தீர்த்தம், நிருதி தீர்த்தம், சரவண பொய்கை ஆகியவை இங்குள்ள தீர்த்தங்கள்.
இடும்பன், சத்தி முனிவர், சரவண முனிவர், மார்க்கண்டேயர், முசுகுந்த சோழன், பிண்ணாக்குச் சித்தர் முதலானோர் இத்தலத்தை வழிபட்டனர்.
இம்மலையை அடுத்துள்ள நகரம் கமலாலயம், காளிநகர், திருவிந்தை நகர் என்னும் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.
இம்மலையின் முதல் படியில் இடும்பன் வீற்றறிருக்கிறான். இவன் தன் காவடியின் ஒரு தட்டில் முருகனையும், மற்றொரு தட்டில் வள்ளி, தெய்வானை இருவரையும் வைத்துத் தூக்கி வந்து இங்கு வைத்தானாம்.
கதை
தேவர், அசுரர் போர். சூரபன்மன் முதலான அசுரர்கள் மாண்டனர். அசுரர்களுக்கு வில்வித்தை கற்பித்தவன் இடும்பன். அவன் மறைந்திருந்து தப்பித்துக்கொண்டான்.
இமய மலையில் இருந்த பூர்ச்சை மலையில் அத்தியரின் மாணாக்கன் ஆனான்.
அகத்தியர் ஆணைப்படி அம்மலையில் இருந்த சத்திகிரி, சிவகிரி இரண்டையும், தன் காவடியின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக்கொண்டு திருவாவினன்குடிக்கு (பழனி) வந்தான்.
சென்னிமலை வந்ததும் திசை தெரியாமல் திகைத்தான். இரு தட்டிலும் இருந்த தெய்வங்களை அங்கு இறக்கி வைத்துவிட்டு உறங்கினான். எழுந்ததும் முருகன் அவனுக்கு ஆவினன்குடி செல்ல வழி காட்டினான். இடும்பன் பழனிமலை வந்தான். இதனால் சென்னிமலை, பழனி இரண்டு மலைகளிலும் இடும்பன் சிலை இருக்கிறது.
இம்மலையில் "கையாத எட்டி" (கசக்காத எட்டிமரம்), "மெய்காணாச் சுனை" ஆகியவை இம்மலையில் உள்ளன.
No comments:
Post a Comment