Pages

Wednesday, 26 March 2025

காரெட்டு 8

செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல் உயர - எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாய்அக் கார்.  7  
  • அவன் செந்தழல் வண்ணன்
  • செஞ்சடையன்
  • அவன் சடை போல வானம் மின்னிற்று
  • அழுத்தமான பூ போல வானில் மேகம் உயர்ந்தது
  • காவி மலர் போன்ற கண்ணினை உடையவள் ஒருத்தி
  • அவள் காதலன் பொருள் ஈட்டச் சென்றான்
  • கார் காலத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றான்
  • அவன் வரக் காலம் தாழ்ந்தது
  • இப்போது கார்காலம் வந்துவிட்டது
  • அது அவள் அவன்மீது கொண்டுள்ள அன்பை அளந்துபார்க்க வந்துள்ளது.
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.  8 
  • கார்மேகம் ஆதியான் மணிகண்ட நிறம் கொண்டிந்தது 
  • அண்டத்தை மூடி இருளாக்கிக்கொண்டிருந்தது
  • அது பொழிந்த மழையால் காந்தள். கொன்றை, தளவம் பூக்கள் மலர்ந்தன.  
காரெட்டு  10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரதேவ நாயனார் பாடிய நூல். 
இது 11  ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. 

சிவன்


No comments:

Post a Comment