Pages

Thursday, 30 October 2014

புறநானூறு 64 Purananuru 64

பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி


விறலி! 

புல்-உணவு உண்டு வாழும் நம் வறுமையைப் போக்கிக்கொள்ள 
அரசன் குடுமிக் கோமானைக் கண்டுவர நாம் செல்லலாமா?

யாழ், ஆகுளி, பதலை ஆகிய இசைக் கருவிகளைச் சுருக்குப் 
பையில் போட்டுக்கொண்டு செல்லலாமா?

தன் யானைப் படையால் பருந்துகளுக்கு விருந்தளித்துக்கொண்டு 
அவன் போர்க்களத்தில் இருக்கும்போதும் செல்லலாம்.

பாடல்

நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி,
செல்லாமோதில் சில் வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப,
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்   5
குடுமிக் கோமாற் கண்டு,
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

திணை பாடாண் திணை; 
துறை விறலியாற்றுப்படை.
பாண்டியன் 
பல் யாகசாலை 
முதுகுடுமிப் பெருவழுதியை 
நெடும்பல்லியத்தனார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

விறலி ஒப்பனையுடன் 
இக்காலத்தில் ஆடுவோர்



No comments:

Post a Comment