பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
வழுதி! நீ தேரில் வருகிறாய்.
சிங்கம் வருத்தும் தன் மலைக்குகையில் இருத்தலை
வெறுத்து
தசை இரை பெறும் ஊக்கத்தால்
தான் விரும்பும் திசையில் செல்வது போல
வடநாட்டு
மன்னர் வாட அழிக்கக் கருதி
போரிட நீ புறப்படக் கருதினால்
எதிர் நின்று வருந்தப்போகும்
மன்னர் யாரோ தெரியவில்லையே!
வயலின் ஓரமாக மருதமரத்தில் ஏறியுள்ள கொடி
உண்போர் வயலில் மேயும் மீனைச் சுடுவதால்
வாடும் நிலை போய்
நீ சுடுவதால் வாடும் நிலையினைப்
பெறும்.
ஊர் மன்றத்தில் உள்ள கடவுள் சிலை
ஊரைப் பாதுகாப்பதை
விட்டுவிட்டுப் போய்,
அந்த இடம் நரைத்தலை முதியவர் வல்லு விளையாடும் குழியில்
காட்டுக்கோழி
முட்டையிடும் காடாக மாறிவிடும்.
பாடல்
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
வட புல மன்னர் வாட, அடல் குறித்து, 5
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் 10
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக் 15
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!
திணை வாகை;
துறை அரச வாகை.
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை
மருதன் இளநாகனார்
பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment