Pages

Wednesday, 15 October 2014

புறநானூறு 49 Purananuru 49

சேரமான் கோக்கோதை மார்பன்


அவனை நாடன் என்று சொல்வேனா.
ஊரன் என்று சொல்வேனா
பனிக்கடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் சேர்ப்பன் என்று சொல்வேனா

வாளேந்திய நிலையிலேயே தோற்றம் தரும் 
கோதையை எப்படிச் சொல்வேன்?

தினைப்புனம் காப்பவர் தட்டையைப் புடைக்கும்போது 
பறவைகள் எழுந்து பறப்பது போல 
அவன் செல்லும் வயல்-பகுதியிலும், 
கடல்நிலப்-பகுதியிலும் பறவைகள் எழுந்து பறக்கின்றனவே. 
அவன் செல்லுமிடங்களில் பறப்பவை 
போர்க்களத்தில் புலால் உண்ணும் பறவைகள்

பாடல்

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்கு கதிர் அலமரு கழனியும்,    5
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே!

திணை பாடாண் திணை
துறை புலவராற்றுப் படை.; துறை இயன்மொழியும் ஆம்.
சேரமான் கோக்கோதை மார்பனைப் 
பொய்கையார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

தட்டை


    No comments:

    Post a Comment