Pages

Monday, 13 October 2014

புறநானூறு 40 Purananuru 40

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்


வெற்றி வேந்தே! 

நீயோ பிறர் கோட்டைகளை வென்று 
அதன் அரசன் புனைந்திருக்கும் அரசுமுடியால் 
உன் காலுக்கு வீரக்கழல் செய்துகொண்டவன்.

நானோ உன்னை இகழ்வோர் கொற்றம்(கொட்டம்) அடங்கப் பாடுபவன்.

நீ இன்று போல் என்றும் காட்சிதர வேண்டும்.
என்றென்றும் எளிதில் காட்சி தந்து இன்சொல் வழங்கவேண்டும்.
ஒரு யானை படுக்கும் நிலப்பரப்பில் 
ஏழு யானைகளுக்கு உணவளிக்கும் 
நெல் விளையும் 
வளம் மிக்க நாடு உன்னுடையது.

பாடல்

நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன் நின்
அடி பொலியக் கழல் தைஇய
வல்லாளனை; வய வேந்தே!    5
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும!
ஒரு பிடி படியும் சீறிடம்            10
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!
  • திணை அது
  • துறை செவியறிவுறூஉ.
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 
  • ஆவூர் முலங்கிழார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
இவ்வாறு கழல் செய்துகொண்டான்


    No comments:

    Post a Comment