Pages

Thursday, 9 October 2014

புறநானூறு 32 Purananuru 32

சோழன் நலங்கிள்ளி


நலங்கிள்ளி 
தன் குடும்பத்தார் சமைப்பதற்காக 
வஞ்சி நகரத்தையே தருவான்.

அவனைப் பாடும் விறலியர் தலையில் பூ வைத்துக்கொள்ள 
விலைப் பொருளாக மதுரை நகரத்தையே தருவான்.

எல்லோரும் வாருங்கள்
அவனைப் பாடிப் பெற்றுக்கொள்ளலாம்

அவனைப் பாட நமக்கு உரிமை உண்டு.

குயவர் சிறுவர் விளையாடுகையில் 
தந்தையைப் போலப் 
பானை செய்யும் சக்கரத்தில் வைத்த ஈரக் களிமண் போல 
அவன் மலை இருக்கும்
(மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் மலை). 

அவன் நாடு அதனைச் சூழ்ந்திருக்கும் வயல்வெளிகளைக் கொண்டது.

பாடல்

கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள்,
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என,
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்           5
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த
பசு மண் குரூஉத் திரள் போல, அவன்
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே.        10
  • திணை பாடாண்திணை
  • துறை இயன்மொழி.
  • சோழன் நலங்கிள்ளியைக்  
  • கோவூர் கிழார் பாடியது.
காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

மலைக்கோட்டை 
உச்சிப்பிள்ளையார் கோயில் 
மலை

    இந்த மண் 
    சிறுவர் விளையாட வைத்தது போல
    மேலே படத்தில் உள்ள மலை 
    இருக்கிறதாம்
    பாடல் காட்டும் உவமை



    No comments:

    Post a Comment