கடலலையின் ஒலி ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
பூந்தாதுகளை அள்ளிக்கொண்டு வீசும்
ஊதைக் காற்று
‘தவ்’ என்று
என்னை முடங்க வைக்கிறது.
மூதூரில்,
மணல் மலிந்து கிடக்கும் தெருவில்
எனக்கு இப்படிப்பட்ட நிலை.
ஊரின் சதுக்க
மன்றத்தில்
குரால் மரத்தில் இருக்கும் ஆண் கூகை
குரல் எழுப்பிக் குழறுகிறது.
நள்ளிரவில்
அணங்குப் பேய்கள் நடமாடுகின்றன.
அவள்
எழுதப்பட்ட பெண் பாவை போல,
பலரும் நினைக்கும்
கட்டழகி (வனப்பு).
அகன்ற, மூங்கில் போன்ற தோளினை
உடையவள்.
மடமைக் குணம் கொண்ட சிறிய பெண்.
சுணங்கு அணிந்த முலையினை உடையவள்.
அந்த முலையைத்
தழுவும் எண்ணத்துடன்,
மீன்களும் கண்ணுறங்கும் வேளையில்,
நான் தூங்காமல் கிடக்கிறேன்.
என் நிலைமை என்ன ஆகும்?
தலைவனுக்குத் தலைவி பற்றிய நினைவு
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்
ஓதமும் ஒலி ஓவின்றே;
ஊதையும்
தாது உளர் கானல்
தவ்வென்றன்றே;
மணல் மலி மூதூர்
அகல் நெடுந் தெருவில்,
கூகைச் சேவல் குராலோடு
ஏறி,
ஆர் இருஞ் சதுக்கத்து
அஞ்சுவரக் குழறும், 5
அணங்கு கால் கிளரும்,
மயங்கு இருள் நடு நாள்;
பாவை அன்ன பலர்
ஆய் வனப்பின்,
தட மென் பணைத்
தோள், மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன
முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும்
பொழுதும், 10
யான் கண் துஞ்சேன்;
யாதுகொல் நிலையே?
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய
தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே
சொல்லி யது.
வினைத்தொழில் சோகீரனார் பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:
Post a Comment