Pages

Thursday, 22 December 2016

நற்றிணை 305 Natrinai 305

நூலால் வரிந்து சுற்றி 
அழகுடன் திகழும் உன் பந்து 
சும்மா கிடக்கிறது. 

நீ 
தண்ணீர் ஊற்றாமல் 
உன் வயலைக் கொடி வாடிக்கிடக்கிறது. 

நீ விளையாடுவாயே அந்த இடத்தில் 
மயிலின் காலடி போல் 
இலையைக் கொண்டதாய்ப் 
பூத்திருக்கும் நொச்சிச் செடி 
தனித்து நிற்கிறது. 

இந்த நிலையில் 
இவற்றைப் பார்க்கும்போது 
நான் 
உன்னைக் காணும் ஏக்க நோயால் துடிக்கிறேன்.

என் மகளே!

உன் தோழி என்னிடம் கூறுகிறாள்.

காய்ச்சும் வெயிலின் சினம் தணிந்திருக்கும்போது, 
இலை இல்லாத மரக்கிளையில் 
அமர்ந்துகொண்டு, 
வரிப்புறா புலம்பும் ஒலி கேட்கும்போது, 
வெயில் தணிந்த மாலை வேளையில், 

தன் காதலன் வேல் வீரனைப் பார்த்து 
மலைக்காட்டு வழியில் 
என் தோழி புறாவுக்காக வருந்திக்கொண்டிருப்பாளோ, 
என்று உன் தோழி கூறுகிறாள்.

நான் என்ன செய்வேன், 
என்கிறாள் 
தலைவியைப் பெற்ற தாய்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
நோய் ஆகின்றே மகளை! நின் தோழி,             5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே.               10

நற்றாய், தோழிக்குச் சொல்லியது;
மனை மருட்சியும் ஆம்.
கயமனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


வரிப்புறா
உவமை

No comments:

Post a Comment