முதல் இரவு இன்பத்துக்குப் பின்னர்
தலைவி
தோழியிடம் சொல்கிறாள்.
அவன் மலைநாடன்.
மூங்கில் அடர்ந்த மலை.
எருவை மலர் மண்டிக்கிடக்கும் மலை.
யானைகள் போரிட்டு ஒடிந்து கிடக்கும் தந்தம்
போல
காந்தள் மலரின் கவிழ்ந்த இதழ்கள்
காடெல்லாம் மணக்கும் மலை.
அப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்.
விசும்பிலிருந்து தீயும், காற்றும் பிறக்கும்.
அதுபோல,
அவன் தந்த புணர்ச்சி
எனக்கு இன்பமும் துன்பமும்
தருகிறது.
இது மாயம் அன்று.
என்னை இறுக்கிய அவனது மலர்ந்த மார்பு.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி
தீயும்
வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும்
இன்பமும் ஆகின்று மாதோ;
மாயம்
அன்று தோழி! வேய் பயின்று,
எருவை
நீடிய பெரு வரைஅகம்தொறும்,
தொன்று
உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் 5
கொன்ற
யானைக் கோடு கண்டன்ன,
செம்
புடைக் கொழு முகை அவிழ்ந்த
காந்தள்
சிலம்புடன்
கமழும் சாரல்
இலங்கு
மலை நாடன் மலர்ந்த மார்பே!
மணமனையுள் புக்க தோழி தலைமகளது
கவின் கண்டு சொல்லியது.
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:
Post a Comment