உலகைப் படைத்த
முதிய குயவனாகிய பிரமன்
நொச்சிப்
பூ சூடியவன்.
அவன் உண்ணும் உணவாக (பலி),
கள்ளைப்
படைப்பர்.
அப்படிப் படைக்கும் ஊர் மன்ற விழா
நடைபெறும் பழம்பெருமை கொண்ட ஊரில்
என்
மகள் இல்லாமல்
நான் விழாக் கொண்டாடும்போது
எவ்வாறு துடிக்கிறேனோ,
அவ்வாறு,
என் மகள்
பொம்மல் ஓதியைத்
தன் சொற்களால் வயப்படுத்தித்
தன்னுடன் கொண்டுசென்றானே
அந்தக் கொடுமைக்காரக்
காளை,
அந்தக் காளையின் தாயும்
தன் மகன் தன்னுடன் விழாக் கொண்டாட இல்லையே
என்று துடிக்கட்டும்
(விதுப்புறுக),
என்கிறாள் மகளைப் பெற்ற தாய்.
உலகு படைத்த குயவனுக்கு
(பிரமனுக்கு)
நொச்சிப்பூ சூட்டி
ஒரு குறிப்பிட்ட நாளில்
ஊருக்கு ஊர்
பொதுமன்றத்தில்
விழாக் கொண்டாடினர் போலும்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
மணிக்
குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக்
கள் ஆர் கைப் பார்
முது குயவன்
இடு
பலி நுவலும் அகன்தலை மன்றத்து,
விழவுத்
தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங்
கண் ஆயம் காண்தொறும், எம்போல், 5
பெரு
விதுப்புறுக மாதோ எம் இற்
பொம்மல்
ஓதியைத் தன் மொழிக் கொளீஇ,
கொண்டு
உடன் போக வலித்த
வன்கண்
காளையை ஈன்ற தாயே.
தாய் மனை மருண்டு
சொல்லியது;
அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.
கயமனார் பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:
Post a Comment