கொல்லைப் புறங்களில் கோவலர் வாழ்வர்.
ஆங்காங்கே
சிறிதாக அமைந்துள்ள காடுகளில்
குறுகிய அடியியைக் கொண்ட குரவ மரத்தில்
குவிந்த கொத்துக்களாகக்
குரவம் பூக்கள் மலர்ந்திருக்கும்.
அவற்றை ஆட்டிடையர் சூடிக்கொள்வர்.
இத்தகைய சிற்றூரில்
நாம் வாழ்கின்றோம்.
அதுவே நம் இன்பத்துக்குப் (காமத்துக்குப்)
போதுமானது.
அதனை விடுத்து
மேலும் பொருள் வேண்டும் என்று கருதி
என்னை விட்டுப் பிரிந்து
செல்வீராயின்,
ஐய,
ஏதோ வீணாக ஒப்புக்கு ஒன்று சொல்கிறேன்;
கேட்பாயாக.
பிரியின்,
பிரிந்திருக்கும்
காலத்தில்
பெரியவர் நிலைப்பாட்டோடு இருக்கவேண்டும்.
காலத்தில் திரும்பும் பெருந்தன்மை
உடையவராக
இருக்க வேண்டும்.
தலைவி இவ்வாறு கூறுவதாகத்
தோழி தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின்
குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப்
பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
அதுவே சாலும் காமம்;
அன்றியும், 5
எம் விட்டு அகறிர்ஆயின்,
கொன் ஒன்று
கூறுவல் வாழியர், ஐய! வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர்
நிலையே?
தலைமகனைச் செலவுடன்பட்டது;
கடிநகர் வரைப்பில் கண்டு
மகிழ்ந்த தலைமகற்குத் தோழி ''நும்மாலே ஆயிற்று''
என்று சொல்லியதூஉம் ஆம்.
கச்சிப்பேட்டு இளந்தச்சனார் பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.
No comments:
Post a Comment