ஏங்கும் தலைவனுக்கு இனிக்கும் சொற்களைத் தோழி சொல்கிறாள்.
ஒலிக்கும் கடல் பரப்பினை உடையவனே!
விளையாடும்
எங்களோடு சேர்ந்துகொண்டு
வண்டல் மண்ணில் பாவை செய்தாய்.
ஏறி வரும் கடல் அலைகளைக் காலால்
உதைத்து
எங்களோடு விளையாடினாய்.
குன்று போல் ஓங்கியிருக்கும் மணல் மேட்டில் படர்ந்திருக்கும்
அடும்புக்கொடி மலர்களைப் பறித்துத் தந்தாய்.
சினமே இல்லாமல் இனிமையாகப் பேசினாய்.
இவளிடமிருந்து
மறுமொழி கிடைக்கவில்லை.
மெல்ல இல்லம் திரும்புகிறாய்.
ஒன்று சொல்கிறேன் கேள்.
உமணர் உப்பு விற்றுக் கொண்டுவந்த நெல் இருக்கிறது.
அதனை மாவாக்கி உன் குதிரைகளுக்கு உணவு தருவோம்.
நீ உன் மார்பில் நீல மலர் மாலை அணிந்திருக்கிருக்கிறாய்.
அத்துடன் நீ தனியே தூங்கவேண்டி வராது.
(இவளை அணத்துக்கொண்டு
உறங்கலாம்)
எங்கள் இல்லம் கானல் நிலச் சிறுகுடியில்
இருக்கிறது.
சிறிய உப்பள வயலில்
நீரை நேரான வாய்க்காலில் கொண்டுவந்து பாய்ச்சி,
மழைவளம்
வேண்டாமல்
வேளாண்மை (உழவு) செய்பவர்கள் நாங்கள்.
இவளைப் பெறத் தடை ஏதும் இல்லை.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்
வண்டல் தைஇயும், வரு
திரை உதைத்தும்,
குன்று ஓங்கு வெண்
மணற் கொடி அடும்பு கொய்தும்,
துனி இல் நல்மொழி
இனிய கூறியும்,
சொல் எதிர் பெறாஅய்
உயங்கி, மெல்லச்
செலீஇய செல்லும் ஒலி
இரும் பரப்ப! 5
உமணர் தந்த உப்பு
நொடை நெல்லின்
அயினி மா இன்று
அருந்த, நீலக்
கணம் நாறு பெருந்
தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை
சேக்குவை அல்லை
நேர் கண் சிறு
தடி நீரின் மாற்றி, 10
வானம் வேண்டா உழவின்
எம்
கானல்அம் சிறு குடிச் சேந்தனை
செலினே
தோழி படைத்து மொழிந்தது.
உலோச்சனார் பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.
No comments:
Post a Comment