மயிர் நரைத்து முதுமை வரும் என்று எண்ணி,
நல்லறிவு கொண்டவர்
இளமைக் காலத்திலேயே துறவு உள்ளம் கொண்டு வாழ்வார்.
இளமைக் காலத்திலேயே துறவு உள்ளம் கொண்டு வாழ்வார்.
இகழ்ச்சிப் புரையைக் களையாமல்
நிலையில்லா இளமைமையில் மகிழ்ச்சி கண்டவர்
கோல் ஊன்றும் முதுமையில்
துன்புற்று எழுந்திருக்க வேண்டி வரும்.
பாடல்
'நரை வரும்!' என்று எண்ணி, நல் அறிவாளர்
குழவியிடத்தே துறந்தார்; புரை தீரா,
மன்னா இளமை மகிழ்ந்தாரே, கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்.
பத்து – இளமை நிலையாமை
சமண முனிவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலடியார் என்னும் நூல்.
இதில் வெண்பா யாப்பில் அமைந்த நன்னெறிப் பாடல்கள் 400 உள்ளன.
காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்
நரை வரும் |
No comments:
Post a Comment