தலைவி தன் தோழியை நன்னுதல் என விளித்து உலகியலின் மேல் வைத்துத் தன் துன்பத்தைத் தெரிவிக்கிறாள்.
பொதுவாக மாந்தர் மருந்து-மரம் சாகும்படி
அதன் பட்டையை உரிக்கமாட்டார்கள்.
தம் வலிமை குன்றும்படி பட்டினி கிடந்து தவம் செய்யமாட்டார்கள்.
மன்னர் குடிமக்களின் வளம் கெடும்படி அவர்களது பொன்னை வரியாக வாங்கமாட்டார்கள்.
இப்படிப்பட்டவர்கள்
வாழ்வதால்தான் நாமும் உயிரோடு இருக்கிறோம்.
அதனால், பொருளீட்டச் சென்ற என் காதலர் ஈட்டவேண்டிய
பொருளின் அளவை அறிந்திருக்க வேண்டும்.
அவர் அவ்வாறு அறிந்துகொள்ளாமல் மேலும் பொருள்
ஈட்டுவதற்காகக் கோடை காலத்தில் நீண்ட வழியில், நெடுந்தொலைவு சென்றுள்ளார்.
உலகியல்
இந்த நிலைமையில்தான் இருக்கிறது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.
இந்த உண்மை உலகுக்குத்
தெரிந்ததுதான்.
தெரிந்திருந்தும் என்ன பயன்?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
மரம் சா மருந்தும்
கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார்,
உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர் நன்னுதல்!
நாம் தம் உண்மையின்
உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு
அறியார்; தாம் கசிந்து, 5
என்றூழ் நிறுப்ப, நீள்
இடை ஒழிய,
சென்றோர் மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை
எதிர்மொழிந்தது.
கணி புன்குன்றனார் (கணியன் பூங்குன்றனார்?)
இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:
Post a Comment