Pages

Saturday, 19 November 2016

நற்றிணை Natrinai 213

பக்கம் உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய சிறுமிகளே

மன்றத்தில் இருக்கும் பலா மரத்து வேரில் சிவந்த பசுவின் கன்று கட்டப்பட்டிருக்கிறது. 

வேரில் காய்த்திருக்கும் பலாப்பழத்தை அந்தக் கன்று தின்றுவிட்டு அருகில் மூங்கில் காட்டிலிருந்து, அறலில் ஓடிவரும் நீரைப் பருகுகிறது. 

இப்படிப்பட்ட இடத்தில் அருவி ஒலி கேட்கும் இடத்தில் இருக்கும் உங்கள் ஊராகிய சிறுகுடி எது எனக் கேட்டால் சொல்ல மறுக்கிறீர்கள்

சொல்லாவிட்டால் பரவாயில்லை. 

மேகம் கூடிவந்து மழை பொழிந்திருக்கிறது. 
தினைக் கதிர்கள் செம்மையாகக் கொய்யும் பருவத்தில் உள்ளன. 
அதனைக் காக்கும் பணி உங்களுடையதா? 
இதனையாவது சொல்லுங்கள்.

தலைவன் இப்படித் தன் காதலை வெளிப்படுத்துகிறான்.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
'
கன்று கால் யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
5
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ?
10
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!



மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது. 
கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

வேர்ப்பலா

No comments:

Post a Comment