நாலடியார் பாடல்களைத் தொகுத்தவர்
பாடிச் சேர்த்த பாடல் இது.
வானம் தோற்றுவிக்கும் வில் எப்போது
தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது. எனினும் தோற்றம் உண்மை. வானவில்லின் கால் நிலத்தில்
படிவதில்லை. கடவுள் இப்படிப்பட்டவர். இந்தக் கடவுளை நான் வணங்குகிறேன். என் தலை நிலத்தில்
படும்படி வணங்குகிறேன். என் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்குகிறேன்.
No one knows when the rainbow created by the sky will appear; yet, its appearance is real. The foot of the rainbow does not touch the ground. God is like that. I worship this God. I worship by bowing my head until it touches the ground. I worship while praying for the fulfillment of my wish.
பாடல்
வான் இடு வில்லின் வரவு அறியா,வாய்மையால்,
கால் நிலம் தோயாக் கடவுளை,யாம் நிலம்
சென்னி உற வணங்கிச் சேர்தும்- 'எம்உள்ளத்து
முன்னியவை முடிக!' என்று.
சமண முனிவர்கள் பாடிய பாடல்களின்
தொகுப்பு நாலடியார் என்னும் நூல்.
இதில் வெண்பா யாப்பில் அமைந்த
நன்னெறிப் பாடல்கள் 400 உள்ளன.
காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

அருமை அருமை
ReplyDeleteஉணர்ந்து படிக்கிறீர்கள். பாராட்டு.
Delete