Pages

Sunday, 27 November 2016

நாலடியார் Naladiyar 1

உணவு ஆறு சுவைகளோடு உண்டவர்,
விருப்பத்தோடு மனைவி ஊட்ட உண்டவர்,
மேலும் ஒரு கவளம் கூட வேண்டாம் என்று வயிறார உண்டவர்,
இப்படிப்பட்டவரும் வறுமை அடைந்தவராகி,
மற்றொருவரிடம் சென்று,
கூழ் கிடைத்தால் போதும் என்று இரந்துண்ணும் நிலையும் வரலாம்.

ஆதலால் 
செல்வம் என்னும் பேறு ஒன்று உண்டு என்று 
மதிப்பாக வைத்துக்கொள்ள முடியாது.

  • A person who once ate his fill—with no desire for even a single morsel more—of the six-flavored meals lovingly served by his wife, might eventually fall into poverty and be reduced to begging from others, content with merely receiving a bowl of thin gruel. Therefore, one cannot assume that the possession of wealth is a permanent state.

அறு சுவை உண்டி, அமர்ந்து, இல்லாள் ஊட்ட,
மறு சிகை நீக்கி உண்டாரும், வறிஞராய்ச்
சென்று இரப்பர் ஓர் இடத்துக் கூழ் எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று.                     

பத்து - செல்வம் நிலையாமை
சமண முனிவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலடியார் என்னும் நூல்.
இதில் வெண்பா யாப்பில் அமைந்த நன்னெறிப் பாடல்கள் 400 உள்ளன.
காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

செல்வம்

4 comments: