ஊர்ப் பெருமக்கள் வழக்குத் தீர்த்த வரலாறு.
தாழ்ந்த கிளைகளை உடைய மருத மரம், நீர் சூழ்ந்த
துறையில் பூத்து, அழகுடன் திகழும் களத்தில் உழவர், நெல்லந்தாளில், மாடுகளைப் பிணையல்
கட்டி ஓட்டிப், போர் அடித்தனர்.
பின்னர் கடுமையாக வீசும் காற்றில் நெல்லைத் தூற்றினர்.
அப்போது நெல்லந் துரும்பின் தூசி காற்றில் பறந்தது.
பரதவர் உப்பு-வயலில் படிந்து வெள்ளை
உப்பு நாசமாக்கி-விட்டது. அத்துடன், கயல் போன்று தடித்த பரதவரின் கண்ணையும் கெடுத்து
உறுத்தியது.
அதனால் பரதவர் சினம் கொண்டனர்.
கழியில் இருக்கும் சேற்றை வாரி நெற்பொலி
(நெல் குவியல்) மீது இறைத்தனர்.
நெல் நாசமாய்-விட்டது.
உப்பு-உழவர் பரதவரும், கழனி உழவரும் சண்டையிட்டுக்கொண்டனர்.
சேற்றை அள்ளி ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொண்டனர்.
ஊர் முதியவர்கள் அங்கு வந்தனர்.
கையோடு
கை பிடித்துக்கொண்டு சண்டையிட்டுக்கொள்வோரை விலக்கினர்.
பெரிதும் பாதிக்கப்பட்ட நுளையர்க்கு
(பரதவர்களுக்கு) மருதம் பூவின் சாறு விளைந்து முதிர்ந்த
தேறல்-கள்ளை கழனி உழவர்கள் வழங்கி ஒத்துப் போகும்படிச் செய்தனர்.
பொன்னணி அணிந்த எவ்வி நீழல் (நீடூர் நீழல்+ஊர்) அரசன்.
(நீடூர்
மருதநில வளமும் நெய்தல்நில வளமும் மிக்க ஊர்)
அவன் நீடூர் போல பருத்த தோளினையும்,
நல்ல முகவெட்டும் (நன்னுதல்) கொண்ட அரிவை (20 ஆண்டுக் குமரி) ஒருத்தியோடு
மணம் கமழும் பூங்காவில்
தங்கி நீ உன் மனைவிக்குப் பிழை செய்ததை அறிந்து உன் மனைவி அழுதுகொண்டிருக்கிறாள்.
நான் எப்படி உனக்கு
வாயிலாக (பிணக்குத் தீர்ப்பவராக) இருந்து உதவமுடியும்?
என் தெய்வம் போன்றவளுக்கு மாறாக
எப்படி உனக்கு உதவமுடியும், என்று தோழி தலைவனை வினவுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை மருதம்
தாழ் சினை மருதம்
தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன்
களம் பொலிய, போர்பு அழித்து,
கள் ஆர் களமர்
பகடு தலை மாற்றி,
கடுங் காற்று எறிய,
போகிய துரும்பு உடன்
காயல் சிறு தடிக்
கண் கெடப் பாய்தலின், 5
இரு நீர்ப் பரப்பின்
பனித் துறைப் பரதவர்
தீம் பொழி வெள்
உப்புச் சிதைதலின், சினைஇ,
கழனி உழவரொடு மாறு
எதிர்ந்து, மயங்கி,
இருஞ் சேற்று அள்ளல்
எறி செருக் கண்டு,
நரை மூதாளர் கை
பிணி விடுத்து, 10
நனை முதிர் தேறல்
நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி
நீழல் அன்ன,
நலம் பெறு பணைத்
தோள், நல் நுதல் அரிவையொடு,
மணம் கமழ் தண்
பொழில் அல்கி, நெருநை
நீ தற் பிழைத்தமை
அறிந்து, 15
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு
அன்னாளே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில்
வேண்டிய இடத்து,தோழி சொல்லியது.
குடவாயிற் கீரத்தனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்



No comments:
Post a Comment