கார் தொடங்கின்றே
திசையெல்லாம் புதையும்படி மழை தன் காலை இறக்கி
இடியுடன் பொழிந்திருப்பதால், கூத்தாடும் களத்தில் பறை முழங்குவது போல, தேர் மணலைப்
பிளந்துகொண்டு செல்லும் ஓசை கேட்கும்படி அவர் போர்க்களத்தில் செல்கிறார்.
பொன்னணிகள் தொங்குவது போல் நீண்ட கொத்துகளுடன்
கொன்றை பூத்துக் காடே அழகுடன் திகழ்கிறது.
அந்தக் காட்டில் விளக்கு எரிவது போல் தோன்றிப்
பூக்கள் புதர்களில் மலர்ந்துள்ளன. அவற்றுடன் முல்லை, இல்லம் ஆகிய பூக்களும் மலர்ந்துள்ளன.
விலங்கினம் நீர் உண்ணுமாறு கல்லிடுக்குகளில் சுனை நிறைந்திருக்கிறது. இப்படிக் தன்னை
வெளிப்படுத்திக்கொண்டு கார்காலம் தொடங்கிவிட்டது.
இப்படிப்பட்ட காலத்தில் என் காதலர் வெற்றி
கொள்ளும் வேட்கையோடு வேந்தனின் பாசறையில் இருக்கிறார்.
அவர் என்னைப்பற்றி நினைக்கவில்லை.
தோழி! நாம் என்ன செய்யலாம்?
என்னைக் கொல்வதற்கென்றே மாலைக்காலம் முனைந்து வருகிறது.
என்னால் இந்த மாலைக் காலத்தை நீந்திக் கடக்க முடியவில்லையே! இப்படித் தலைவி தோழியை வினவுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை
மாதிரம் புதையப் பாஅய்,
கால் வீழ்த்து,
ஏறுடைப் பெரு மழை
பொழிந்தென, அவல்தோறு
ஆடு களப் பறையின்
வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர்
இழை தூக்கி அன்ன
நீடு இணர்க் கொன்றை
கவின் பெற, காடு உடன் 5
சுடர் புரை தோன்றிப்
புதல் தலைக் கொளாஅ,
முல்லை இல்லமொடு மலர,
கல்ல
பகு வாய்ப் பைஞ்
சுனை மா உண மலிர,
கார் தொடங்கின்றே காலை;
காதலர்
வெஞ் சின வேந்தன்
வியன் பெரும் பாசறை, 10
வென்றி வேட்கையொடு நம்மும்
உள்ளார்;
யாது செய்வாம்கொல்? தோழி!
நோதகக்
கொலை குறித்து அன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ
அரிதே!
பருவம் கண்டு அழிந்த
தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
மதுரை மருதங்கிழார் மகனார்
பெருங்கண்ணனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment