பாசறைத் தோழர் தலைவனுக்குக் கூறுகின்றனர்.
பாசறையில் யானை மதமதக்கும் வலிமையுடன் மற
உணர்வோடு இடி போல முழங்குகிறது.
வேந்தனும் போர்களத்தில் வெற்றிக்கொடியை நிலைநாட்டிவிட்டான்.
கறவை மாடுகள் தம் கன்றுகளுடன் முல்லை நிலத்தில்
துள்ளி விளையாடுகின்றன.
அவற்றுடன் இல்லம் திரும்பும் கோவலர் குழல்
ஊதுகின்றனர்.
உன் ஏவலாளர்களும் விரைந்து இல்லம் நோக்கிச்
செல்கின்றனர்.
உன் தேரோட்டி, குதிரை விரைந்து ஓடும்படி
வார் சாட்டையால் ஓட்ட, நீ உன் வெற்றிக் களிப்புடன் இல்லம் செல்வாயாயின், உன் மனைவியின்
நெற்றிப் பசப்பு எங்கே இருக்கும்? நீங்கிவிடும் அல்லவா.
- புரவி – குதிரை, கழுத்தில் விரிந்த உளைமயிர் கொண்டது. ஓட்டும் திசையில் ஓடக்கூடியது.
- அகலம் – தலைவன் மார்பு, புலவர் புகழும் பொன்மாலை கொண்டது. குளுமையும் மணமும் கொண்ட சந்தனம் பூசப்பட்டது.
- திதிலாட்டி – தீமை இல்லாத உன் மனைவி, அழகில் நெய்தல் மலரை எதிர்க்கும் கண்ணை உடையவள்.
- பசலை – பசபசப்பு, எதிர்பார்க்கும் துடிப்பு, துடிப்பால் தோன்றும் நிற வேறுபாடு, ஏமாந்து கிடக்கும் நிற வேறுபாடு
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை
மத
வலி யானை மறலிய பாசறை,
இடி
உமிழ் முரசம் பொரு களத்து
இயம்ப,
வென்று
கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
கறவைப்
புல்லினம் புறவுதொறு உகள,
குழல்
வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, 5
இளையர்
ஏகுவனர் பரிய, விரி உளைக்
கடு
நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன்
வள்பு வலி உறுப்ப, புலவர்
புகழ்
குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
தண்
கமழ் சாந்தம் நுண் துகள்
அணிய, 10
வென்றி
கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
யாண்டு
உறைவதுகொல் தானே மாண்ட
போது
உறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி
திரு நுதற் பசப்பே?
வினை முற்றிய தலைமகற்கு
உழையார் சொல்லியது.
மதுரைத் தமிழ்க் கூத்தன்
கடுவன் மள்ளனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment