“நான் துன்புறும்படி விட்டுச்சென்றாலும் அவர் செய்யும் தொழில் அவருக்குச் சிறக்க வேண்டும்” என்று தலைவி தலைவனை வாழ்த்துகிறாள்.
1
என் தோள் தன் பழைய அழகை இழந்துவிட்டது. என் மேனி-நலம் பசபசத்து வருந்துகிறது. சேரலாதன் மிகப்பெரும் படையுடன் கடலில் சென்று கடம்பர்களை அழித்து அவர்களின் காவல் மரமான கடம்பினை அறுத்து அதில் தனக்கு முரசம் செய்துகொண்டான். அந்த முரசு முழங்குவது போல, ஊர்த்தெரு மக்களெல்லாம், அவருக்கும் எனக்குமுள்ள கள்ளக்காதல் பற்றி தூற்றும்படிச் செய்துவிட்டு அவன் பொருளீட்டச் சென்றுவிட்டார்.
- கவ்வை – உரக்கப் பேசுதல்
- அலர் – சாடைமாடையாகப் பேசுதல்
- அம்பல் – காதோடு காது பேசுதல்
2
என்றாலும், அவர் செய்யும் தோழிலில் வெற்றி பெறவேண்டும். தோழி, அவர் மலையைக் கடந்து சென்றுள்ளார். மழை பொழியாத நிலையில் மூங்கில் காட்டில் மறைந்து வாழும் யானைமீது புலி பாய, அந்தப் புலி முழங்கும் ஓசை கேட்டுப் பெண்புலி கன்றை விட்டுவிட்டு ஓட, பின் கையைத் தலையில் வைத்துக்கொண்டு ஆசையோடு மீண்டுவந்து பெண்புலி, பிள்ளையைப் போர்களத்தில் தேடும் தாயைப் போல் தேடும் காட்டைக் கடந்து அவர் சென்றுள்ளார்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
1
தோளும் தொல் கவின்
தொலைய, நாளும்
நலம் கவர் பசலை
நல்கின்று நலிய,
சால் பெருந் தானைச்
சேரலாதன்
மால் கடல் ஓட்டி,
கடம்பு அறுத்து, இயற்றிய
பண் அமை முரசின்
கண் அதிர்ந்தன்ன, 5
கவ்வை தூற்றும் வெவ்
வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்
நமக்கு ஒழிய,
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
2
வாய்க்க தில் வாழி, தோழி! வாயாது,
மழை கரந்து ஒளித்த
கழை திரங்கு அடுக்கத்து, 10
ஒண் கேழ் வயப்
புலி பாய்ந்தென, குவவு அடி
வெண் கோட்டு யானை
முழக்கு இசை வெரீஇ,
கன்று ஒழித்து ஓடிய
புன் தலை மடப் பிடி
கை தலை வைத்த
மையல் விதுப்பொடு,
கெடு மகப் பெண்டிரின்
தேரும் 15
நெடு மர மருங்கின்
மலை இறந்தோரே!
தலைமகன் பிரிவின்கண் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது.
மாமூலனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment