பரத்தையிடமிருந்து மீண்டவன் பொய் சொல்வதைத் தோழி பக்குவமாகச் சுட்டிக்காட்டுகிறாள்.
1
சிறுமியர் காஞ்சி மரத்து நிழலில் கரும்பை உலக்கை என வைத்துக்கொண்டு, காலால் ஆற்று மணலைக் குவித்துக் குற்றிக்கொண்டு விளையாடும் துறை கொண்ட ஊரின் தலைவனே!கருப்பு உலக்கை – கரும்பு உலக்கை, வெள்ளி உலக்கை – வெள்ளைநிற உலக்கை. விழுத்தொடி உலக்கை – கரும்பின் விழுமிய மேன்மை கொண்ட உலக்கை.குற்றுதல் – குற்றும்போது கொடி போன்ற மகளிரின் இடை அவ்வப்போது ஆடுகிறது,குற்றும் பொருள் மீன்-முட்டை போன்ற மணல்.குற்றும்போது வள்ளைப்பாட்டு பாடுவர். இந்தச் சிறுமியர் தம் பெற்றோர், உற்றார்-உறவினர் முதலானோரின் செல்வ-வளத்தைப் பாடிக்கொண்டு குற்றுகின்றனர்.குற்றுவோர் ஊரிலுள்ள சிறுமியர்.சிரல் – துள்ளும் வரால் மீனை அருந்திய மீன்கொத்திப் பறவை காஞ்சிமரத்தின் தாழ்ந்த கிளையில், மகளிர் குற்றும் தாள ஒலியியையும், வள்ளைப் பாட்டு ஒலியையும் கேட்டுக்கொண்டு உறங்கும்.துறை – ஆற்றுத்துறை, மருதம் ஆகையால்,
2
நினைத்ததை முடிக்கும்போது அறநெறி வழுவக்கூடாது.நல்லோர் விரும்பாத ஒன்றையும் உடல் உணர்வுகளால் உள்ளம் விரும்பும். அப்படி விரும்புமாயின், எப்போதும், நல்லோர் சொல்லி, முன்பு தாம் கேட்டவற்றைத் தோண்டி எண்ணிப் பார்த்து, அறம், பொருள் நெறிகளிலிருந்து வழுவாமல் நடந்துகொள்ள வேண்டும். உன் பெருந்தகைமைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் நினைத்ததை நிறைவேற்றி முடித்துக்கொள்ள வேண்டும்.
3
அப்படி நடந்துகொள்ள வேண்டிய பெரியோனான நீயே பொய் சொல்லிக்கொண்டு பொல்லாச் செயல்களைச் செய்தால், உண்மையோடு கூடிய ஒழுக்க-நெறி உலகத்தில் வேறு எங்கே இருக்கும்?ஆராய்ந்து நடந்துகொள்வதுதான் பெரியோர் கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறி. ஆராய்ந்து பார்த்தால் நீ செயற்கரிய செய்யும் பெரியோன். உன்னைப் போன்றவர்களிடத்திலும் பொய்யோடு கூடிய தகாத செயல்கள் தோன்றுமாயின் உண்மையான நன்னெறி உலகில் வேறு எங்கே இருக்கும்?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1
வெள்ளி விழுத் தொடி
மென் கருப்பு உலக்கை,
வள்ளி நுண் இடை
வயின் வயின் நுடங்க;
மீன் சினை அன்ன
வெண் மணல் குவைஇ,
காஞ்சி நீழல், தமர்
வளம் பாடி,
ஊர்க் குறுமகளிர் குறுவழி,
விறந்த 5
வராஅல் அருந்திய சிறு
சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும்
தண் துறை ஊர!
2
விழையா உள்ளம் விழையும்
ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆக
மீட்டு, ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை
நாடி, 10
தற் தகவு உடைமை
நோக்கி, மற்று அதன்
பின் ஆகும்மே, முன்னியது
முடித்தல்;
3
அனைய, பெரியோர் ஒழுக்கம்;
அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன 15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய் யாண்டு உளதோ,
இவ் உலகத்தானே?
''வரைந்து
எய்துவல்'' என்று நீங்கும் தலைமகன்,
''தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டிருத்தல் வேண்டும்'' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது.
ஓரம்போகியார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment