காதல் மரம் என்பது புலவர் புகழும் ஒரு மரம்.
1
கூதளம் பூ மாலை வானத்தில் பறப்பது போல இளங் கால்களை உடைய குருகுப் பறவைகள் வானத்தில் பறக்கும். மழை ஈரம் பட்ட நிலத்தில் பூ மலரும் பனிக்காலத்தில் புதுமை தோன்றப் பறக்கும்.
2
என் நலத்தைத் தின்றுகொண்டு பசலை நோய் என் மேனியை வாட்டுகிறது.இந்தத் துயரம் அவருக்குத் தெரியாமல் இருக்குமா?தெரிந்திருக்குமே.தெரிந்திருந்தும் நம் மனம் போன்ற மென்மை அவர் மனத்தில் இல்லை.அதனால் நாம் வருந்தும் உலகம் பற்றி அவர் நினைத்தும் பார்க்கவில்லை.அவரை நான் எப்படி எடுத்துக்கொள்வது?
3
நார்
= அன்பு
அம்பல்
= களவுக்காதல் உறவு பற்றிக் காதோடு காதாகப் பேசும் பேச்சு
அலர்
= களவுக்காதல் உறவு பற்றி வெளிப்படையாகப் பேசும் பேச்சு
புலவர்
புகழ்ந்த நார் இல் மரம்
எத்தனை
தடவை உடலுறவு கொண்டாலும் நிறைவடையாத காதல் என்னும் தளிரை விடும்.
அம்பல்
என்னும் மொட்டு விடும்.
அலர்
என்னும் அரும்பாகப் பெருக்கும்.
புலவர் புகழ்ந்த காதல்-மரம் வாடைக்காற்று வீசும்போது, எல்லை இல்லாத காதலை என் முலையில் மூட்டி, காமநோயை இளமுலையில் உய்த்துக் கொண்டுவந்து திரட்டி நீட்டி வளர்க்கிறது. ஊரார் பேசும் அம்பலாக மொட்டு விடுகிறது. நிறைவடையாத காதல் தளிரை விடுகிறது. உலகமெல்லாம் நிழல் பரப்பி காதலை வளர்க்கிறது.இப்படி வளர்க்கும் காலத்திலும் அவர் வரவில்லையே!என்ன செய்வேன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
பசுங் கால் வெண்
குருகு வாப் பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு
பரப்ப,
புலம் புனிறு தீர்ந்த
புது வரல் அற்சிரம்,
2
நலம் கவர் பசலை
நலியவும், நம் துயர் 5
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன
மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
யாங்கு என உணர்கோ,
யானே? வீங்குபு
3
தலை வரம்பு அறியாத்
தகை வரல் வாடையொடு 10
முலையிடைத் தோன்றிய நோய் வளர்
இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத்
திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல்
அம் சினை,
ஆராக் காதல் அவிர்
தளிர் பரப்பி,
புலவர் புகழ்ந்த நார்
இல் பெரு மரம் 15
நில வரை எல்லாம்
நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும்
வாராதோரே.
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச்
சொல்லியது.
ஒளவையார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment