பாணன் போர்க்களத்திற்கும் சென்று தலைவியின் நிலைமை பற்றித் தலைவனுக்குத் தூது சொல்கிறான்
1
பசையுடன் கூடிய பச்சை எண்ணெயில் நனைத்து வைத்தது போன்ற பெரிய சிறகுகளை உடைய வௌவால் பறவை பகலெல்லாம் தொங்கி உறங்கிய மரக்கிளையை விட்டுவிட்டு, மாலையில் பழத்தைத் தேடிக்கொண்டு பறக்கும்.அந்த மாலை வேளையில் முல்லை மணக்கும்.மணமகள் கூந்தல் போல் மணக்கும்.வௌவால் பறப்பதால் கொடியில் பூத்திருக்கும் முல்லையை வண்டின் கூட்டம் தவிர்க்கும்.இப்படிப்பட்ட மாலை வேளையில் அவர் வரினும், வராமல் இருந்தாலும் அவருக்கு இன்பமாகத்தான் இருக்கும்போலும்.தோழி! இதுதான் நிலைமை.
2
இப்படிச் சொல்லிக்கொண்டு மழை போல் பொழியும் கண்ணீரால் தன் மார்பகம் நனையப் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாள் உன் மனைவி என்று தூது வந்த பாணன் சொல்கிறான்.
3
நீயும், பறவை போல் பறக்கும் உன் குதிரைகளைத் தேரில் பூட்டி விரைந்து ஓட்டு.நம் போர்த்தொழிலும் முடிந்துவிட்டது அல்லவா.இவ்வாறு தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை
1
பசை படு பச்சை
நெய் தோய்த்தன்ன
சேய் உயர் சினைய
மாச் சிறைப் பறவை
பகல் உறை முது
மரம் புலம்பப் போகி,
முகை வாய் திறந்த
நகை வாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறி,
கொடிமிசை 5
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
வரினும், வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி? என,
தன்
2
பல் இதழ் மழைக்
கண் நல்லகம் சிவப்ப,
அருந் துயர் உடையள்
இவள் என விரும்பிப் 10
பாணன் வந்தனன், தூதே;
நீயும்
3
புல் ஆர் புரவி,
வல் விரைந்து, பூட்டி,
நெடுந் தேர் ஊர்மதி,
வலவ!
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய
வினையே!
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.
மதுரை.......மள்ளனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment