Pages

Friday, 9 September 2016

அகநானூறு Agananuru 243

தலைவி வாடைக்காற்றோடு பேசிக்கொண்டு புலம்புகிறாள்.

1
வாடைக் காற்றின் தாக்கத்தால் அவரைப்பூ காய்க்காமல் கொட்டுகிறது. 
பவளம் போன்று துளையுள்ள ஈங்கைப் பூ பூக்கிறது. 
ஈர நிலத்தில் பகன்றைப் பூ பூக்கிறது. 
இவை உதிர்கின்றன. 
மழைநீர் வரவில்லை. 
நெல் கதிர் வாங்கி, அவல் இடிக்கும் அளவு முற்றியுள்ளது.

வாடைக் காற்றே! 

இவ்வாறான நிலைமையை உண்டாக்கிக்கொண்டு இரக்கம் இல்லாமல் வீசிகிறாய்.
2
நெடுநேரம் வீசுகிறாய். 
துணை இல்லாமல் வாழவேண்டிய நிலைமை ஆகிவிட்டதே என்று நான் புலம்பிக்கொண்டிருக்கிறேன். 
அது என் வல்லமைக்குள் இல்லை என்று சொல்லிக் காட்டிக்கொண்டு வீசுகிறாய்.

அவர் நிலைமை உனக்குத் தெரியாதா?
தெரிந்துகொண்டால் நல்லது.
3
இப்படிப் பிதற்றிக்கொண்டு நான் கண்ணீர் விடுகிறேன். 
என்னை மட்டும் மேலும் மேலும் துன்புறுத்துகிறாய். 
உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை. 
என் பழவினைப் பயனால் துன்புகிறேன்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
அவரை ஆய் மலர் உதிர, துவரின
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு    5
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
''நெடிது வந்தனை'' என நில்லாது ஏங்கிப்
2
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை    10
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
3
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று;
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! 15

தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் ''ஆற்றேன்'' என்பது படச் சொல்லியது.
கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

அவரைப் பூ, காய்

No comments:

Post a Comment