சொல்லூர்ச்
சிவன் கோயிலில் வேள்வித்தூண்.
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
செல்லூர், ஊணூர், சாய்க்காடு மூன்றும் அண்மைய
ஊர்கள்.
1
ஊரில் உள்ளவர்களும், தெருவில் உள்ளவர்களும் ஒன்றாகச் சேர்ந்து அலர் தூற்றும்படித் தேரில் வருகிறாய். இவளைப் பணியவைக்கும்படி பேசுகிறாய்.
2
கெடுதி செய்யாத வேள்வித் தீ செல்லூரில் எரிந்தது.“மழுவாள் நெடியோன்” என்னும் பெயர் கொண்ட அரசன், யானைப்படையுடன் வந்து தாக்கிய அரசர்களை பூண்டோடு அழித்தான்.அவன் தன் பெயர் கொண்ட சிவன் முன்னிலையில் அந்த வேள்வி நிறைவேறியது.அதற்கு நடப்பட்ட வேள்வித்தூண் நாற்புறமும் கயிறுகளால் கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அது காணத்தக்க பொலிவு கொண்டதாக விளங்கியது.
3
அந்த வேள்வித்தூண் போன்றது உன் மார்பு.ஆனால் அந்தத் தூணைப் போல அனைவராலும் காணமுடியாத மார்பு உன்னுடையது.நினைத்தாலும் நடுங்கவைக்கும் மார்பு அது.(அதனை நீ இவளுக்குக் கொடுத்தாய். இப்போது கொடுக்கவில்லை)தொலைவில் இருக்கிறாய்.இவளை வருந்தும்படிச் செய்கிறாய்.
4
நெல் வளம் மிக்க ஊர் ஊணூர்.நிலையில்லாத புதுப் பறவைகள் அங்கு வரும்.உள்ளம் விரும்பிக் காதல் கொள்ளும். புணரும்.அந்தப் புணர்ச்சி போல் நீ இவளைப் புணர்ந்தாய்.
5
நெல் விளையும் நிலம் கொண்ட ஊர் சாய்க்கானம். (சாய்க்காடு)அங்கு வாழும் மீனவர்கள் கழிமுகத்தில் வலை வீசி மீன் பிடித்துவருவர்.இங்கு நெல்லும் மீனும் நேர்ந்து கிடப்பது போல நீயும் இவளும் ஒன்றிக் கிடக்கிறீர்கள்.
கானலில் விளையாடும் ஆயத் தோழிமார் அனைவரும் வியந்து நோக்கும் சாய்ந்த தோளினை உடையவள் இவள்.இந்தத் தோள்நலம் என்றும் சிதையாமல் இருப்பதற்குப் பாதுகாப்பான ஒரு வழியை நீ சொல்லவேண்டும்.நான் தெளிவாக நம்பும்படிச் சொல்லவேண்டும்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்
1
ஊரும் சேரியும் உடன்
இயைந்து அலர் எழ,
தேரொடு மறுகியும், பணி
மொழி பயிற்றியும்,
2
கெடாஅத் தீயின் உரு
கெழு செல்லூர்,
கடாஅ யானைக் குழூஉச்
சமம் ததைய,
மன் மருங்கு அறுத்த
மழு வாள் நெடியோன் 5
முன் முயன்று அரிதினின்
முடித்த வேள்வி,
கயிறு அரை யாத்த
காண் தகு வனப்பின்,
அருங் கடி நெடுந்
தூண் போல, யாவரும்
3
காணலாகா மாண் எழில்
ஆகம்
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே 10
நெடும் புற நிலையினை,
வருந்தினை ஆயின்,
4
முழங்கு கடல் ஓதம்
காலைக் கொட்கும்,
பழம் பல் நெல்லின்
ஊணூர் ஆங்கண்,
நோலா இரும் புள்
போல, நெஞ்சு அமர்ந்து,
காதல் மாறாக் காமர்
புணர்ச்சியின், 15
5
இருங் கழி முகந்த
செங் கோல் அவ் வலை
முடங்கு புற இறவொடு
இன மீன் செறிக்கும்
நெடுங் கதிர்க் கழனித்
தண் சாய்க்கானத்து,
யாணர்த் தண் பணை
உறும் என, கானல்
6
ஆயம் ஆய்ந்த சாய்
இறைப் பணைத் தோள் 20
நல் எழில் சிதையா
ஏமம்
சொல் இனித் தெய்ய,
யாம் தெளியுமாறே.
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை
எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்


No comments:
Post a Comment