காத்திருக்கும் தலைவனைப் பற்றித் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
1
பரதவர் குறிக்கோளுடன் வாழ்வர்.இறைவானம் இருக்கும் கூரைக் குடிசையில் வாழ்வர்.மீன்கொலையில் ஆர்வம் கொண்டவர்கள்.எறியும் உளியை வீசிப் பெருமீன்களைப் பிடிப்பர்.அப்படிப் பிடிக்கும்போது மீன் குருதி (இரத்தம்) பட்டு கடல்நிறம் மாறும்.கடலே புலால் நாற்றம் வீசும்.அப்போது கடல் வானவில் போலத் தோற்றமளிக்கும்.அலைத் திவலைகள் மோதும் அழுவக்கடலை உழுதுகொண்டு, அலையின் வல்லமையை அழித்து, திமிலில் வரிசை வரிசையாகச் செல்வர்.இப்படிச் செல்லும் கடல் துறையின் தலைவன் அவன்.
2
அவன், நள்ளிரவில் உன் தோளைப் பெறலாம் என்று நினைத்துக்கொண்டு வந்திருக்கிறான்.வந்தவன் நம் ஊர்க் கானல்-துறையைப் பெரிதும் பாராட்டினான்.இடைவிடாது பாராட்டினான்.
3
இப்போது அவன் அழகிய மார்புப் படுக்கையை மாற்றிக்கொண்டிருக்கிறானாம்.(உன்மீதுதான் அந்தப் படுக்கையாம்).தன் தேரை தாழைமரக் கிளையுடன் சேர்த்து நிறுத்தியிருக்கிறானாம்.இனித் திரும்பிப் போகமாட்டானாம்.இப்படிப் பலமுறை அவன் சொல்ல நான் கேட்டிருக்கிறேன், என்கிறாள் தோழி.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, நெய்தல்
1
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறிஉளி பொருத ஏமுறு பெரு
மீன்
புண் உமிழ் குருதி புலவுக்
கடல் மறுப்பட,
விசும்பு அணி வில்லின் போகி,
பசும் பிசிர்த்
திரை பயில் அழுவம் உழக்கி,
உரன் அழிந்து, 5
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
2
பானாள் இரவில், நம் பணைத்
தோள் உள்ளி,
தான் இவண் வந்த காலை,
நம் ஊர்க்
கானல்அம் பெருந் துறை, கவின்
பாராட்டி,
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் 10
3
சாயல் மார்பின் பாயல் மாற்றி,
''கைதை அம் படு சினைக்
கடுந் தேர் விலங்கச்
செலவு அரிது என்னும்'' என்பது
பல கேட்டனமால் தோழி! நாமே.
தோழி தலைமகன் சிறைப்புறமாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
உலோச்சனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment