பளிங்குக் கற்கள் செறிந்து கிடப்பது
போல வானத்தில் ஒளி வீசும் விண்மீன்களுக்கு இடையிடையே பாலை மொண்டு வைத்திருப்பது
போல் ஈர வெள்ளை நிற நிலவொளியால் என்னை மயக்கித் துன்புறுத்துவதை அறியாமல் முழுமை
பெற்றுத் திகழும் மதியமே! நீ சால்பும் செம்மையும் கொண்டு விளங்குகிறாய் என்பதை
உணர்ந்து உன்னை ஒன்று வினவுகிறேன். உனக்குத் தெரியாமல் உலகில் யாரும்
ஒளிந்துகொண்டிருக்க இயலாது. எனக்குத் தெரியாமல் மறைந்துகொண்டிருக்கும் என் தலைவன் இருக்கும்
இடத்தை எனக்குக் காட்டிவிடு. இன்றேல் நல்லழகு இழந்து வாடும் என் தோள் போல் நீயும் கொஞ்சம்
கொஞ்சமாகச் சிறுத்துப் போவாய். தெரிந்ததைத் தெரியவில்லை என்று பொய்யாகச் சொல்லுதல்
தகுமோ? – தலைவன் வராமல் இருக்கும் காலத்தில் தலைவி இவ்வாறு நிலாவிடம் கேட்கிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – நெய்தல்
பளிங்கு செறிந்தன்ன
பல் கதிர்
இடைஇடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே
நெட்டிடை
கழிந்து பொருள்வயிற்
பிரிந்த காலத்து
ஆற்றாளாகிய தலைமகள்
திங்கள் மேலிட்டுத்
தன்னுள்ளே சொல்லியது
வெள்ளைக்குடி
நாகனார் பாடல்
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:
Post a Comment