புலம்ப (நெய்தல்
நிலத் தலைவனே)! நீ இவளைத் திருமணம் செய்துகொண்டு அருள் புரியாமல் இருப்பது
கொடியது. நீர்நாய்க் குட்டி கொழுத்த மீனைத் தின்றுவிட்டு தில்லைச் செடிப் புதர்ப்
படுக்கையில் உறங்கும் சேர்ப்பு நிலத் தலைவன் நீ. கானல் நிலம் கொண்ட தொண்டி என்னும்
ஊரிலுள்ள வயல்களில் நெல் அறுக்கும் உழவர்களின் அறுவாள் தன்மீது பட்டுவிட்டது என்று
பல இதழ்களை உடைய நெய்தல் கூம்பாமல் நீர் அலையிலேயே மிதந்துகொண்டிருக்கும். அது போல
உன்னை விரும்பும் இவள் கண்ணும் கண்ணீர் ஈரத்திலேயே மிதந்துகொண்டிருக்கிறது. நீ
திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறது. தோழி தலைவனிடம்
கூறுகிறாள்,
![]() |
| நீர்நாய் மீன் தின்னல் (பனிநிலம்) |
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – நெய்தல்
அருளாய்
ஆகலோ கொடிதே இருங்
கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப யான் கண்டிசினே
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப யான் கண்டிசினே
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே
களவின்கண்
நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாயின
தோழி வரைவு
கடாயது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:
Post a Comment