வாடைக் காற்றே! சுட்ட அரக்குப்போல
உருண்ட மொட்டுகளைக் கொண்ட ஈங்கை மலரில் நீர்த்துளிகளை ஒட்டவைத்துக்கொண்டு நிலத்தின்
வெளிப்புறமெல்லாம் கருவுற்றுக் கிடக்கிறாய். உனக்கு எந்தத் தீங்கும் இல்லை. என்
காதலர் என் தோள் வளையல் நழுவும்படிச் செய்துவிட்டு பொருளைத் தேடிக்கொண்டு வரச்
சென்றிருக்கிறார். நான் துணை யாரும் இல்லாமல் ஒரு பக்கம் ஒதுக்கிடத்தில் வருந்திக்கொண்டு
இருக்கிறேன். என்மீது வீசி என்னை வருத்தாமல் இருப்பாயாக. தலைவி வாடைக்காற்றிடம் இப்படி உரையாடுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – பாலை
அட்டரக்கு
உருவின் வட்டு
முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே
பிரிவிடை
ஆற்றாளாகிய தலைமகள்
சொல்லியது
ஆசிரியர்
பெயர் தெரியவில்லை
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:
Post a Comment