(என்னைக் காப்பாற்றிவரும்) திருமலைராயன்
வீமன் போல வலிமை
மிக்கவன். அவன் புகழ்
எங்கும் பொங்கி வழிகிறது. அதனைப் பார்த்த பிரமன் தன் இருக்கை தாமரையை விட்டுவிட்டு
ஓடிச் சத்திய லோகத்தில் புகுந்துகொண்டான். கையில் சக்கரத்தை உடைய திருமால்
பூமியிஇருந்து வானம் தொடும்படி வளர்ந்தான். சிவன் கயிலை மலையில் அமர்ந்து நிலாவைச்
சூடிக்கொண்டான். தன் தண்டாயுதத்தால் கடலின் ஆழத்தைப் பார்த்தான்.
பாடல்
வீமனென வலிமிகுந்த திருமலை ராயன்கீர்த்தி வெள்ளம்பொங்கத்
தாமரையி னயனோடிச் சத்திய லோகம் புகுந்தான் சங்கபாணி
பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான் சிவன் கயிலைப்பொருப்பில்
சோமனையுந் தலைக்கணிந்து வடவரைத் தண் டாலாழஞ் சோதித்தானே .(158)
வீமன் என வலி மிகுந்த திருமலைராயன் கீர்த்தி வெள்ளம் பொங்கத் தாமரையின் அயன் ஓடிச் சத்திய லோகம் புகுந்தான் சங்க பாணி பூமி தொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான் சிவன் கயிலைப் பொருப்பில் சோமனையும் தலைக்கு அணிந்து வடவரைத் தண்டால் ஆழம் சோதித்தானே .(158)
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.
No comments:
Post a Comment