![]() |
| அன்னத்தின் மேல் பிரமன் |
தில்லையில்
குடிகொண்டுள்ள கணபதி தள்ளாடி நடக்கும் ஆண்யானை. மதம் கன்னத்தில் ஒழுகும் யானை. அவன்
பெரு வயிற்றைக் கண்டு தங்களுக்கு இல்லையே என்று யார் யார் என்ன ஆனார்கள். புலவர்
கூறுகிறார். இயல்பாக அவர்களுக்கு இருக்கும் பண்புகளைக் கணபதியைக் கண்டதால்
நிகழ்ந்ததாகக் கூறுவது புலவர் கற்பனை.
- வானவர்கள் எல்லாம் விழித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
- கையில் வேலை உடைய ஆறுமுகன் கண் 12 உடையவன் ஆனான்.
- பரந்து பாயும் மூன்றாவது கண்ணை உடைய சிவன் நஞ்சை உண்டான்.
- திருமால் பயந்துபோனான்.
- உமையம்மை பாதி உடலாகி நிற்கின்றாள்.
- அழகிய உலகைப் படைப்பதே அவம் என்று பிரமனும் அன்னப்பறவையை விட்டு இறங்காமல் அலைகின்றான்.
பாடல்
கம்பமதக் கடகளிற்றான் தில்லைவாழும் கணபதிதன் பெருவயிற்றைக் கண்டுவாடி
உம்பரெலாம் விழித்திருந்தா ரயில்வேற் செங்கை உடையவறு முகவனுங் கண்ணீ ராறானான்
பம்புசுடர்க் கண்ணனுமோநஞ் சுண்டான்மால் பயமடைந்தா னுமையுமுடல் பாதியானாள்
அம்புவியைப் படைத்திடுவ தவமதேயென் றயனுமன்ன மிறங்காம லலைகின்றானே .(156)
சொல்லோட்டம்
கம்ப மதக் கட களிற்றான் தில்லை வாழும் கணபதி தன் பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செங்கை உடைய அறுமுகவனும் கண் ஈ ர் ஆறு ஆனான்
பம்பு சுடர்க் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள்
அம் புவியைப் படைத்திடுவது அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே .(156)
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment