Pages

Sunday, 5 June 2016

அகநானூறு Agananuru 111

கோடியர் யாழைப் பையில் மாட்டி எடுத்துச் செல்வது போல் யானைக்கை தொங்கும் 


தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
1
உள்ள விருப்பம்போல் அவர் மகிழ்திருக்கமாட்டார். சினம் கொண்ட பிறர் ஏசும் சொல்லுக்காக நாணி விரைவில் வந்துவிடுவார். தோழி, அஞ்ச வேண்டாம்.
2
அரச யானைக்கள் செல்லும்போது துணிக்கொடி பறக்கும். அந்தக் கொடி போல உலர்ந்த தலையை உடைய ஞெமை மரத்தில் (கருவேல மரம்) சிலந்திப் பூச்சிகள் கூடு கட்டியிருக்கும். அந்தக் குன்றத்து ஓடை (சிற்றாறு) வழியில் கோடைக்காலத்தில் அவர் சென்றுள்ளார்.
3
யானை தொங்கும் கையை உடையது. மழைமேகம் என மருளக்கூடிய கருநிறம் கொண்டது. ஓய்ந்திருக்கும் காலத்தில் துன்பம் வரும்போது தன் கையை உயர்த்தி, கோடியர் (பாணர்) கொம்பு ஊதுவது போல முழங்கும்.
4
செந்நாய் காட்டுப்பன்றியைக் கொன்று வழியெல்லாம் புலவு நாற்றம் வீசும்படி இழுத்துச் செல்லும்.
5
குருதியைக் குடிக்கும் செம்பருந்து, போர்க்களத்தில் புண்பட்டுக் கிடப்போரை இரவு வேளையில் தேடுவோரின் விளக்கைப் போல் தோன்றும். இப்படிப்பட்ட வானளாவிய மலைப்பகுதியில் அவர் சென்றிருக்கிறார்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர் வாழி, தோழி! அரச
2
யானை கொண்ட துகிற் கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி       5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
3
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
4
அத்தக் கேழல் அட்ட நற் கோள்        10
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
5
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின், தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.      15

தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

செந்நாய் உணவு உண்ணல் 

No comments:

Post a Comment