இரவில் வருகிறாய்
எப்போதும் இவள் உன்னவள்
பகலில் வரலாமே
தலைவியை அடையத் தலைவன் இரவில் வருகிறான்.
முதலையும், சுறாமீனும் அலையும் வழியில் வருகிறான். அதனை விரும்பாத தோழி பகலில் வந்தாலும்
தலைவியைப் பெறலாம் என்று குறியிடம் சுட்டுகிறாள்.
1
கடலும் நிலமும் சேருமிடம்
சேர்ப்பு. சேர்ப்பு நிலத் தலைவன் சேர்ப்பன்.
ஈரமான கடல்நிலச் சேர்ப்ப! நீ இரவில் வந்துள்ளாய். கொடிய முயற்சி கொண்ட முதலையும், கொம்பு
கொண்ட சுறா மீனும் உலாவும் உப்பங்கழிக் காட்டை நீந்திக் கடந்து வந்துள்ளாய். இல்லையா?
2
இவள் உனக்கு எப்படி அரியவள் ஆவாள். எப்போது வேண்டுமானாலும் இவளை நீ அடையலாம் அல்லவா. இரவில் இப்படி
வரவேண்டாம். கடல் பரப்பில் தேடி இவள் தந்தை பிடித்துவந்த மீனை நானும் இவளும்
பகலில் காயவைத்துக்கொண்டிருப்போம். அப்போது வரலாமே.
3
பழமையான நீர் தேங்கிக் கிடக்கும் கரையோரத்தில்
முண்டகக் கொடி தழைத்துப் பல மலர்களுடன் பூத்திருக்கும். இரட்டை இலைகளுடன் கூடிய சிவப்பு
நிற மென்மையான அடும்புக் கொடி படர்ந்ததிருக்கும். அந்தக் கொடியை உன் தேர்ச்சக்கரம்
அறுக்கும்படி மணி கட்டிய தேரில் குதிரையைப் பூட்டி ஓட்டிக்கொண்டு வரலாம்.
4
அது புன்னையங்கானல். மின்னும் இலைகளைக் கொண்டது
புன்னை மரம். கொத்துக் கொத்தாகப் பூக்கும் அதன் பூக்கள் பொன்னைப் போல் பூந்தாதுகளை
உதிர்க்கும். அங்கு நீ பகலில் வந்து இவளுக்கு அருள் தந்தால் நல்லது.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – நெய்தல்
1
கொடுந்
தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங்
கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய்
மன்ற தண் கடற் சேர்ப்ப!
2
நினக்கு
எவன் அரியமோ, யாமே? எந்தை
புணர்
திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
பல்
மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
3
முண்டகம்
கலித்த முதுநீர் அடைகரை
ஒண்
பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங்
கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன
மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, 10
4
மின்
இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண்
நறும் பைந் தாது உறைக்கும்
புன்னைஅம்
கானல், பகல் வந்தீமே.
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment