வந்துவிடுவேன் என்று அவர் சொல்லிச் சென்ற மழைக்காலம் வந்துவிட்டது
திரும்புவேன் என்று அவர் சொல்லிச்சென்ற மழைக்காலம்
வந்துவிட்டது பார்த்தாயா – என்று தலைவி தோழியிடம் காட்டி மகிழ்கிறாள்.
தொடு
1
தலைவிக்கு, புதிதாக நீராடாமல் பழைய பின்னலோடு
கிடக்கும் தலைமுடி. முன்பு எண்ணெய் பூசிய அந்தக் குழல்-முடி முன்புறம் முலையைத் தழுவிக்கொண்டு
கிடக்கிறது. இரண்டு முலைகளுக்கு இடையே ஒற்றைக்கால் முத்து-வடம். ஒளி வீசுகிறது. அந்த
ஒளியில் இரண்டு முலைகளும் தெரிகின்றன. கூந்ததாகிய இருட்டில் தெரிகின்றன. இருட்டில்
பார்க்கும் பூனையின் கண்கள் போலத் தெரிகின்றன. இந்தக் கோலத்தோடு கற்புத்தெய்வம் உன்னை
வந்து தொழும்படி அமர்ந்திருக்கிறாயே, நோயோடு இருக்கிறாயா என்றால், இல்லை. – என்கிறாள்
தோழி.
2
தலைவி விளக்கம் தருகிறாள்.
இப்படி அமர்ந்திருக்கிறாளே, என்ன ஆவாளோ என்று
என்னைப் பற்றி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறாய்.
3
நானும் வேறு வழி இல்லாமல் ஏதோ எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
நம் துன்பம் தீரப்போகிறது. வந்து பார்.
4
அவர் சென்றிருக்கும் நாட்டில் மின்னலுடன்
மழை பொழிவதைப் பார்.
- தினைப்புனம் காத்துக்கொண்டு பந்தல் மேல் நிற்பவன் யானையின் துதிக்கை போல இருக்கும் வீசு-கொள்ளியைக் கையில் வைத்துக்கொண்டு சுழற்றுகிறான். தீப்பொறி சிதறும் அந்தக் கொள்ளி போல் வானம் மின்னுகிறது.
- கொடிகள் மண்டிக்கிடக்கும் புதரில் இருள்நிற நாகம் உறங்கும் காலம் பார்த்து மேயவரும் யானை போன்ற வலிமை உடையவன் அந்தப் பரண்-பந்தல் மேல் இருக்கும் சேணோன்.
- அவன் கொள்ளிக்கட்டை போல் மின்னல்.
மீள்வேன் என்று அவர் குறித்த மழைக்காலம்
வந்துவிட்டது பார்த்தாயா. – தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை - பாலை
1
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், 5
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
2
''என் ஆகுவள்கொல், அளியள்தான்?'' என,
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
3
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது 10
காணிய வம்மோ காதல்அம் தோழி!
4
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி 15
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
சென்ற தேஎத்து நின்றதால், மழையே.
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான்
குறித்த பருவ வரவு கண்டு
அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது.
எருமை வெளியனார்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment