என்றும் நிலைபெற்றிருக்கும் நாளுக்குத் தமிழர் பெயர் சூட்டியுள்ள விண்மீன் தொகுதிகள், மதியம், கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்), ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளிகொண்டிருக்கும் திருமால்) என்று கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
![]() |
| அனைத்தையும் ஆதியில் படைத்தவன் ஆதிரையான் (ஆதிரை நாளுக்குரிய சிவன்) என்கின்றனர். |
பாடல்
மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு – 1
முத்தோள்ளாயிர நூலின் பாடல்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. இது தொகுக்கப்பட்ட காலம் 5 ஆம் நூற்றாண்டு. தொகுத்தவர் பாடிய இந்தப் பாடல் 5 ஆம் நீற்றாண்டு.![]() |
| அனைத்தையும் ஆதியில் படைத்தவன் ஆகும் திரையில் அறிதுயில் கொண்டுள்ள திருமால் என்கின்றனர் |


No comments:
Post a Comment