Pages

Monday, 7 December 2015

தாயர் அடைப்ப - முத்தொள்ளாயிரம் Muttollayiram

சேரன்
கோதை
கோதை வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் உலா வந்தான்.
அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர்.
கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர்.
இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம்.
யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை.
பாடல்
தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையை
கண்டுலாஅம் வீதிக் கதவு – 2
கதவுக் குடுமி
ஆங்கிலத்தில்

நூலின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.

No comments:

Post a Comment