Pages

Friday, 11 December 2015

மூதுரை Mudurai கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

ஆடாத உடம்பும், பவளம் போன்று அழகிய செம்மேனியும் கொண்ட ஆனைமுகன் திருவடிகளில் பூக்கொண்டு சார்த்தி எப்போதும் சார்ந்திருப்பவர்க்கு வாயிலிருந்து நல்ல வாக்கு வரும். நல்ல மனம் உண்டாகும். மாமலராள் அருள்-பார்வை உண்டாகும்,
மலர் = தாமரை
வெண்டாமரை மேல் இருப்பவள் கலைமகள்
செந்தாமரை மேல் இருப்பவள் கலைமகள
பொன்-தாமரை (பொற்றாமரை) மேல் இருப்பவள் மலைமகள்
மூவரின் அருட்பார்வையையும் பெறலாம்.
தும்பி கையான்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)


2 comments: