Pages

Saturday, 5 December 2015

அகநானூறு Agananuru 45

அன்னி - ஆதிமந்தி - வானவரம்பன்


ஆதிமந்தி தன் காதலனைக் காவிரி ஆற்றில் தொலைத்துவிட்டு பித்தாகித் தேடிக்கொண்டு அலைந்தாள். 

என் காதலர் அச்சம் தரும் காட்டு வழியில் சென்றிருக்கிறார் என்று நானும் ஆதிமந்தி போல அலைவேனோ – என்று சொல்லிக்கொண்டு தலைவி வருந்தும் பாடல் இது.

ஊரார் அர் தூற்றுதல், காதலனைத் தேடி அலைதல், தனிமை-நோய் ஆகியவற்றுக்கு அக்கால வரலாற்று நிகழ்வுகள் உவமைகளாகப் புலவரால் காட்டப்பட்டுள்ளன.
1
கயிற்றில் ஏறி ஆடுவோர் பறையை முழக்கிக்கொண்டு ஆடுவர். 
கோடையில் வாடிய வாகை நெற்றுக்கள் அவர்களின் பறை முழக்கம் போல ஒலிக்கும். 
அப்படி ஒலிக்கும் கடுமையான கோடைக்காலம் அது. 
அந்தக் காலத்தில் குன்றத்து வழியில் என் காதலர் செல்கிறார்.

உழிஞ்சில் = வாகை மரம்
2
அது தண்ணீர் இல்லாத வழி. 
ஆள் நடமாட்டமும் இல்லாத வழி. 
ஓங்கி உயர்ந்த யானையைக் கொன்றுவிட்டு வேங்கைப்புலி விளையாடும் வழி.

உழுவை = வேங்கைப்புலி
3
இதனை எண்ணி என் மாந்தளிர் போன்ற மேனி பசலை நோய் கூர்ந்து துன்பம் அடையட்டும். 
பீர்க்கம்பூ போன்ற பசலைநிறம் கொள்ளட்டும்.
4
அதனைப் பார்த்து ஊரார் அலர் தூற்றட்டும். 
அப்போது யாழிசைப் பாணர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். 
அப்போது அவர்கள் செய்த ஆரவாரம் போல அலர் தூற்றட்டும். 
5
ஆதிமந்தி காதலன் பெயரைச் சொல்லிக்கொண்டு பித்தேறி ஊர் ஊராகத் திரிந்து துன்புள்ளாள். 

(ஆதிமந்தியின் காதலன் ஆட்டனத்தி. கழார் என்னும் ஊரில் தந்தை ஆதிமந்தியின் தந்தை கரிகாலன் முன்னிலையில் காவிரியாற்றுத் துறையில் நீச்சல் நடனம் நடைபெற்றது. ஆட்டன் அத்தி ஆற்றில் நீந்தி நடனம் ஆடினான். காவிரி என்னும் பெண்ணும் அவனுடன் இணைந்து ஆடினாள். ஆற்றுவெள்ளம் இருவரையும் அடித்துச் சென்றது. காவிரிதான் தன் காதலன் அத்தியை இழுத்துச் சென்றுவிட்டாள். ஆறு கொண்டுசெல்லவில்லை. ஊர்மக்களே மீட்டுத் தாருங்கள் என்று கதறிக்கொண்டே ஆதிமந்தி ஆற்றங்கரை ஓரமாகவே சென்றாள். காவிரியாற்று வெள்ளத்தில் காவிரி மாண்டுபோனாள். ஆட்டன்-அத்தி கரையில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தான். மருதி என்னும் பெண் அவனைக் காப்பாற்றி அவனுடன் வாழ்ந்துவந்தாள். ஆதிமந்தி அத்தியைத் தேடிக் கதறிக்கொண்டு வருவதை மருதி பார்த்தாள். ஆதிமந்தி அரசன் மகள். அத்தியின் காதலி. எனவே அத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டு, அவன் பிரிவைத் தாங்கமுடியாமல், கடலில் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள்)

ஆதிமந்தி போல நானும் பித்தேறி, அலர் தூற்றுகிறார்களே என்று பித்தேறி அலைவேனோ?
6
பொன்மாலை அணிந்த வானவரம்பன் ஒரு சேர மன்னன். 
கடலிலிருந்து புயல்காற்று வீசுவது போல வேல் வீசித் தாக்குபவன். 
அவனுடைய தாக்குலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் துன்புறும் ஒன்றைமதில் கொண்ட கோட்டைக்குள் இருப்பவர்கள் போல காதலனை எண்ணி அச்சம் கொண்ட நோயோடு தூங்காமல் கிடக்கிறேனே!


பாடல்
சொல் பிரிப்புப் பதிவு
திணை -  பாலை

1
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
2
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்        5
காடு இறந்தனரே, காதலர். மாமை,
3
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும். அலரே,
4
அன்னி குறுக்கைப்பறந்தலை, திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,        10
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும்பெரிதே. யானே,
5
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோபொலந்தார்,    15
6
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன்அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!     

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
வெள்ளிவீதியார் பாடியது

Princess AdiManti, roamed in madness after losing her lover. My lover went to earn in a dreadful route. As she did, shall I roam searching him? The heroine says. The poet describes the love-sick of the heroine with some historical events he has witnessed.  
It is hot summer. The dry-seeds on the tree Ulinjil make sound as the drum music used during rope-walk-play. He is passing though such a lonely desert.
There is no water to drink. There is no people tread on the route. Tigers play happily after killing elephant.
Let me feel sorrow thinking his route. Let my beautiful complexion lose having some love-sick symptoms.
Let others murmur on my love-sick like that of the one historical event. Tidian fought against Anni and cut the Royal-tree Punnai of the latter king. The news of the event was spoken everywhere. As the news was spoken, let the murmur news may also be spread.
Let me hear the news. Let me roam in mad upon this spreading news. Let me roam as Princess AdiManti done when she lose her lover. (AdiManti is the daughter of King KariKalan. She loved AttanAtti. AttaiAtti displayed a show in the water of Cauvery river at the village Kalar. It was synchronized swimming. A girl Cauvery by name also joined with him in his show. The flood drew them away. Girl Cauvery lost her life. Male swimmer was ashore. A girl Maruti, by name, saved him and lived together with him for some time. AdiManti came searching on her lover in the hope of her lover would not die. She cried in her madness revealing her feelings. Maruti handed over her man to the princess. Without her man, Maruti didn’t live further. She fell into the sea and died.)
I am in sleepless. King VanaVaramban attacked a fort ferociously as storm. The people inside the fort were sleepless I dread. As they were at that time, I am sleepless at present. The heroine speaks.   

A poem by:  VelliVidiyar
The text is belongs to second century B.C. or earlier.  

படம் - மகளிர் இருவர் நீச்சல் நடனம்
பாடல் - ஆண், பெண் இருவர் நீச்சல் நடனம் 


No comments:

Post a Comment