பச்சைவடம் பாகுசேலை சோமன் என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
பாடல்
மாயன் துயின்றதுவும் மாமலராள் சொல்லதுவும்
ஏய குருந்திற்கொண் டேறியதும் - தூயை
இடப்பாகன் சென்னியின்மே லேறியதும் பச்சை
வடப்பாகு சேலைசோ மன். (29)
மாயன் துயின்றது பச்சைவடம் என்னும் பாம்பு.
திருமால் பால்-கடலில் படுத்து உறங்கும் பாம்பின் பெயர் பச்சைவடம்
மாமலராள் சொல்லது பாகு
தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் மகளின் வாயிலிருந்து வரும் சொல் இனிக்கும் வெல்லப் பாகு.
ஏய குருந்தில் கொண்டு ஏறியது சேலை
மாயன் குருந்த மரத்தில் ஏறியிருந்தபோது கொண்டு சென்றது குளிக்கும் கோவியரின் சேலை
தூயை இடப்பாகன் சென்னியின் மேல் ஏறியது சோ மன்.
தூயவளாகிய உமையை இடப்பாகத்தில் கொண்டிருக்கும் சிவன் தலைமேல் ஏறிக்கொண்டிருப்பது சோமன் எனப்படும் பிறைநிலா.

No comments:
Post a Comment