நாநீநூநே – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
பாடல்
அரையின் முடியி லணிமார்பி னெஞ்சில்
தெரிவை யிடத்தமர்ந்தான் சேவை – புரையறவே
மானார் விழியீர் ம ல ர வொற்றி நிற்கும்
ஆனாலா நாநீநூ நே .(34)
மான் போன்ற களங்கமற்ற விழிநோக்கம் கொண்ட பெண்களே!
கண்டுகொள்ளுங்கள்.
Ø தெரிவையாகிய பெண்ணை இடப்பாகத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பவன் சிவபெருமான்.
Ø அவன் நமக்கு அருள் பாலிக்கும் சேவை செய்கிறான்.
Ø அவன் எப்படி இருக்கிறான்?
Ø நா நீ நூ நே ஆகிய எழுத்துக்களோடு ம ல ர ஆகியவற்றின் ஒற்று-எழுத்து ஒன்றை இணைத்து விடை கண்டுகொள்ளுங்கள்.
![]() |
| சிவன் கங்கையைத் தலையில் வைத்திருக்கிறான் |
அரையில் இருப்பது நார்
அரை என்னும் இடுப்பில் இருப்பது நாரால் செய்யப்பட்ட ஆடை
அரை என்னும் நிழலில் இருப்பது நாம்
அரை என்னும் நிழலில் இருப்பது நார் என்னும் அன்பு
(நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் – திருக்குறள் – அன்பு இன்மை தோன்றின்)
முடியில் இருப்பது நீர்
கங்கை நீர்
அழகிய மார்பில் இருப்பது நூல்
பூணூல்
நெஞ்சில் இருப்பது நேம்
நெஞ்சில் இருப்பது நேயம் என்னும் உறவுமுறை.
அவன் நாமாக, நாம் அவனாக இருக்கும் உறவுமுறை.

No comments:
Post a Comment