புதுப்புனலில் நீராடி வருகிறோம் என்று சொன்னால் தாய் விடுவாளா – என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இவள் தாயின் கட்டுக்காவலில் இருக்கிறாள் என்பதை மறைந்திருக்கும் தலைவன் உணர்ந்துகொள்ள வேண்டுமாம். தொடு
ஆயத்தாரோடு ஓரை விளையாடாமல் இல்லத்திலேயே
முடங்கிக் கிடத்தல் அறநெறி ஆகாது விளையாடாமல் இருந்தால் உடல்-வலிமை ஆக்கமும் குன்றும்.
அதனால் புதுவெள்ளம் நுரை பொங்கி, மலர்களை அடித்துக்கொண்டு வருகிறது. அதில் நீராடி வருகிறோம் – என்று வணங்கி, அடம்பிடித்துக் கேட்டால்
மட்டும் தாய் வெளியில் செல்ல விட்டுவிடுவாளா என்ன? – என்கிறாள் தோழி.
நேற்று நள்ளிரவில் வானம் இருண்டு, மின்னி,
இடித்து பெருமிதத்துடன் மலைமீது மழை பொழிந்துள்ளது.
ஆடு = பெருமிதம்
ஆயம் = விளையாடும் தோழிமார்
எல் = ஒளி
ஓரை = ஒருமித்துக் கும்பலாகப் போட்டி இன்றி
விளையாடும் விளையாட்டு
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
குறிஞ்சி
''விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே; ஆக்கமும்
தேய்ம்'' என
குறு நுரை சுமந்து,
நறு மலர் உந்தி,
பொங்கி வரு புது
நீர் நெஞ்சு உண ஆடுகம், 5
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;
''செல்க'' என விடுநள்மன்
கொல்லோ? எல் உமிழ்ந்து,
உரவு உரும் உரறும்
அரை இருள் நடு நாள்,
கொடி நுடங்கு இலங்கின
மின்னி,
ஆடு மழை இறுத்தன்று,
அவர் கோடு உயர் குன்றே. 10
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.
பிரான் சாத்தனார் பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.
நன்றி நண்பரே
ReplyDelete