அம்ம வாழி, தோழி! இன்று அவர்
வாரார்
ஆயினோ நன்றே சாரல்
சிறு
தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு
அரிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள்
யாமத்தும் கறங்கும்.
யாமம்
காவலர் அவியாமாறே.
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு
பொழுதும் மறுத்து வரைவு கடாயது.
அம்ம
தோழி,
கேள். இன்று அவர் வராமல் இருந்தால் நல்லது.
நள்ளிரவிலும் தொண்டகச் சிறுபறை முழக்கம் கேட்கிறது. இரவு வேளையில் வயலில் தினை அறுக்கும்போது கேட்கும் ஒலி போலத் தொண்டகப்பறையின்
ஒலி கேட்கிறது.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு


No comments:
Post a Comment